பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்


பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப் பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க் கும் நோக்கில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் பள்ளிகளில் பயிலும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சிவசாமி தலைமை தாங்கினார். முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர் தம்புசாமி முன்னிலை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய திறமையை வெளிப் படுத்தினர்.

தமிழ் மொழி தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் நடுவர்களாக ஆசிரியர்கள் மாயகிருஷ்ணன், முத்தரசன், சங்கீதா உள்பட 9 பேர் செயல்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றி தழும் வழங்கப்பட்டது.

போட்டிகளில் முதல் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 14-ந்தேதி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story