மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய சிறிய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு + "||" + Velankanni is a pilgrimage to the devotees of the small and beautiful devotees

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய சிறிய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய சிறிய தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய சிறிய தேர்பவனி நேற்று நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனி நடைபெறுவது வழக்கம். நேற்று பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி 7–ந்தேதி(வெள்ளிகிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 8–ந்தேதி(சனிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
2. ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி
ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.