மாவட்ட செய்திகள்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் + "||" + The danger of collapse of ponds in the Pole Valley area

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கம்பம்,


லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரையிலான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோகமும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போகமும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன. குறிப்பாக குளங்களின் கரைகள் அகலப்படுத்தும் பணி நடந்தது. கரையின் மேல்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் செம்மண் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது.

இதன்எதிரொலியாக குளங்களின் கரையில் செம்மண் பரப்பும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது கரைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த கரைகள் வழியாக விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு தேவையான புல் கட்டுகளை வாகனங்களில் கொண்டு செல்வோரும் சிரமப்படுகின்றனர். வீரப்பநாயக்கன்குளத்தின் கரை வழியாக தான் கம்பத்தில் இருந்து நாராயணதேவன்பட்டி கிராம மக்கள் சென்று வருகிறார்கள். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குளங்களின் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியர்கள் வராததால் 90 பள்ளிகள் மூடல் மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம்
ஆசிரியர்கள் வராததால் 90 பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
2. திருமருகலில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமருகலில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. தர்மபுரி ஆடு அறுக்கும் கூடத்தில் குவிந்து கிடக்கும் எலும்புகளால் நோய் பரவும் அபாயம்
தர்மபுரி டேக்கீஸ் பேட்டையில் கோட்டை கோவிலுக்கு செல்லும் சாலையில் நகராட்சி சார்பில் ஆடு அறுக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது.
4. கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு சுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம்
கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு சுவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
5. திருத்துறைப்பூண்டி வீரன்நகர் பகுதியில் மழைநீர் வடியாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்
திருத்துறைப்பூண்டி வீரன்நகர் பகுதியில் மழைநீர் வடியாததால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே மழைநீரை அகற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை