இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2018 3:15 AM IST (Updated: 12 Sept 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரப்படுகின்றனர். எனவே இலவச பஸ் பாசை உடனடியாக வழங்க வேண்டும்.

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்கும் முடிவை கைவிட வேண்டும். கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுர்ஜித், மாவட்ட துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மதன், சிவனேஸ்வரி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்.

அதேபோல் தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். 

Next Story