தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆசிரியர் காலனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர். முகாமில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வி தகுதி உடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
சான்றிதழ்கள்
மேற்கண்ட தகுதி உள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. முகாமில் கலந்து கொள்வதற்கு எந்தவித பயணப்படியும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story