புதுக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


புதுக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Sept 2018 3:00 AM IST (Updated: 13 Sept 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

புதுக்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

14 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பாரதி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள். இவர் பிரசவத்துக்காக அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரியம்மாளுக்கு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் வெங்கடேஷ் குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 11-ந்தேதி தனது மனைவியின் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் மறுநாள் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல், நெக்லஸ் உள்ளிட்ட 14 பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து வெங்கடேஷ் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story