திருக்கழுக்குன்றம் அருகே வாகனம் மோதி என்ஜினீயர் பலி


திருக்கழுக்குன்றம் அருகே வாகனம் மோதி என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 14 Sept 2018 2:30 AM IST (Updated: 14 Sept 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த முள்ளிக்கொளத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனம்.

கல்பாக்கம், 

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த முள்ளிக்கொளத்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனம். இவரது மகன் ரேவந்த் (வயது 28). தனியார் நிறுவனத்தில் உதவி என்ஜினீயராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சதுரங்கப்பட்டினம் சாலையில் மங்களம் கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரேவந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ரேவந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story