மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி தொழிலாளி பரிதாப சாவு + "||" + From the running bus Landed Stuck on the wheel The body is crushed The worker death pity

ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி தொழிலாளி பரிதாப சாவு

ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி தொழிலாளி பரிதாப சாவு
கடத்தூர் அருகே ஓடும் பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ளது மடதஅள்ளி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 53). தொழிலாளி. இவர் நேற்று கடத்தூரில் இருந்து அரூர் செல்லும் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.


மடதஅள்ளி பிரிவு ரோட்டில் வந்த போது ஓடும் பஸ்சில் இருந்து முன் பக்க படிக்கட்டு வழியாக சண்முகம் இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அந்த நேரம் அவர் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.