மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேச்சு
மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்.
பெங்களூரு,
மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய மந்திரி ஜே.பி.நட்டா கூறினார்.
அடிப்படை வசதிகளை...
மனநிலை பாதிப்பு ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்தம் குறித்த 3 நாட்கள் சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-
மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கும் ெபாருட்டு மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனைப்படி திட்டங்களை வகுத்து செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. விரைவில் இதற்கான திட்ட அறிக்கையை பெற்று மனநோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.
மலிவு விலை மருந்து கடைகள்
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எந்த வகையில் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களின் குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். மத்திய அரசின் ஆயுஸ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 55 கோடி பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் நாட்டில் 1½ லட்சம் மலிவு விலை மருந்து கடைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆயுஸ்மான் திட்டத்தின் கீழ் மனநோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி மருந்துகளையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் இலவச சிகிச்சை மற்றும் இலவச மருந்து வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். இதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.
சமூகம் புறக்கணிக்கிறது
கருத்தரங்கில் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி சிவானந்தபட்டீல் பேசுகையில், “உலகில் 30 கோடி பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மனநலம் பாதித்தவர்களை இந்த சமூகம் புறக்கணிக்கிறது என்பது வேதனைக்குரிய ஒன்று. கர்நாடகத்தில் ெபரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் நரம்பு மற்றும் மனநல பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மனநோயாளிகளுக்காக மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு தயாராக உள்ளது. மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்தில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை சேர்க்கவில்லை. இதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story