கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு


கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க அனுமதி மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Sept 2018 4:30 AM IST (Updated: 15 Sept 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

மும்பை, 

கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.

24 வார கரு

20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை சட்டப்படி கோர்ட்டு அனுமதி பெற்றால் மட்டுமே கலைக்கமுடியும். இந்த நிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை தன் மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார்.

சிறுமிக்காக வாதாடிய வக்கீல், “சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி 24 வார கர்ப்பமாக இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவரின் கருவை கலைக்க அனுமதி அளிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அனுமதி

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் கருவை கலைக்க அவர்கள் அனுமதி வழங்கினர்.

மேலும் வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வக்கீல், “ சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் கற்பழிப்புக்கு ஆளானதால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதாகவும்” தெரிவித்தார்.

இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவளின் பெற்றோர் மாநில சட்ட சேவை ஆணையத்தை அணுகி சட்ட உதவி மற்றும் சிறுமியின் கல்விக்கு தேவையான நிதி உதவியை பெற்று க்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

Next Story