விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 11:32 PM GMT)

ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு ஊழல் செய்து இருப்பதாக குற்றம்சாட்டி விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

இந்திய பாதுகாப்பு துறைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய பா.ஜனதா அரசு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்த அவர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நேற்று விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு முன்னாள் எம்.பி. ராணி தலைமை தாங்கினார். பேரணியை மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர்கள் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், ஆர்.பி.ரமேஷ், பி.எஸ்.ஜெய் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சிவராமன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன்மவுலானா, அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெமிமேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி விழுப்புரம் பூந்தோட்டம் பாதை, ரங்கநாதன் சாலை, திருச்சி நெடுஞ்சாலை வழியாக கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கட்சி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதன் பிறகு முக்கிய நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய உறுப்பினர்கள் சிறுவைராமமூர்த்தி, ரங்கபூபதி, மாவட்ட பொருளாளர்கள் தயானந்தம், கருணாகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் வாசிம்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேஷ்ராம், ஆறுமுகம், இல.கண்ணன், நாட்டாமை குணசேகரன், வீரமுத்து, நகர தலைவர்கள் செல்வராஜ், விநாயகம், ஏழுமலை, மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார், செந்தில்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் விஸ்வநாதன், ராஜேஷ், புருஷோத்தமன், சின்னையன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம் உள்பட மாநில, மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Next Story