மாவட்ட செய்திகள்

தினம் ஒரு தகவல் : மனிதன் குழுவாக வாழத் தொடங்கியது எப்போது ? + "||" + Day one info: When was the man started to live as a group?

தினம் ஒரு தகவல் : மனிதன் குழுவாக வாழத் தொடங்கியது எப்போது ?

தினம் ஒரு தகவல் :  மனிதன் குழுவாக வாழத் தொடங்கியது எப்போது ?
ஆதி மனிதன் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்க்கை நடத்தினான். இதனால் தனிமனித வாழ்வு மிகப்பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தது.
அந்த இழப்பை ஈடுசெய்ய விரும்பிய ஆதி மனிதன் தங்களை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள குழுவாகக் கூடி வாழத் தொடங்கினான்.

இந்த கூட்டமைப்பு வாழ்க்கை முறையையே மானிடவியலாளர் இனக்குழு சமூக அமைப்பு என்கின்றனர். தான் சார்ந்த குழுவிற்கு தீங்கு வராமலும், தன் சமூகத்தின் கட்டமைப்பு சீர்கெடாமலும் காப்பதே இக்குழு தலைவனின் முதன்மையான பணியாக இருந்தது.


தனி மனித நிலையில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மனித இனம் குழுவாக செயல்பட்டது. இந்த குழுவில் அனைவரும் சமமாக கருதப்பட்டனர். அதனால் தங்களின் சமூக தளத்தில் வலிமை, அறிவு முதிர்ச்சி என்னும் வகைகளில் உயர் நிலையில் இருந்த ஒருவனையே இனக்குழு தலைவனாக கருதினர். இனக்குழு சமூக அமைப்பு தமிழ் இலக்கியத்தில் திணைகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டது. ஆதிகால மக்களின் வாழ்வு குறிஞ்சி நிலமாகிய மலைகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

கலை வளர்ச்சியால் நாகரிக நிலை அடைந்த சமூக அமைப்பு மருதம் திணையில் நிலை பெற்றிருக்கலாம். ஆதி மனிதனை குழு அமைப்பு செயல்பாட்டிற்கு தூண்டியதற்கான காரணம் தனித்து நின்று வெற்றிபெற முடியாத நிலையே ஆகும்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலத்தின் முதற்பொருளாகவே குறிக்கப்படுகிறது. அருவி ஒலித்தல், குரங்குகள் தாவுதல், மயில்கள் விளையாடுதல் என்பன சமூக அமைப்பு தோற்றம் பெற்ற நிலப்பகுதியை குறிக்கின்றன.

ஆதி பொதுவுடைமை அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையில் அனைவரும் சமமாக கருதப்பட்டனர். பாகுபாடின்றி பகுத்துண்டு வாழ்ந்தனர். இனக்குழு வாழ்க்கைக்கு இன்றியமையாத பகிர்ந்துண்ணல் என்ற வழக்கம் இனக்குழு மக்களிடையே பொதுவுடைமையை ஏற்படுத்தியது. வேட்டையில் கிடைக்கக் கூடிய பொருட்களை அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பூமி வெப்பமடைதல் குறித்த ஆய்வு
இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை பூமி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம்.
2. தினம் ஒரு தகவல் : குழந்தைகளின் முரட்டுத்தனம்
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
3. விமானத்தில் சிக்கும் பறவைகள்
‘பறவை மோதி விமானம் கீழே விழுந்து பயணிகள் இறந்தனர்’ என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்படுகின்றன.
4. ‘டொனால்ட் டக்’ உருவான கதை
உலகிலேயே அதிகமான கார்ட்டூன் படங்களை தயாரித்த நிறுவனம் எது என்றால், உடனே வால்ட் டிஸ்னி என்று சொல்லி விடுவீர்கள். ஆனால், டிஸ்னியின் கார்ட்டூன் படங்களில் அதிகமாக தோன்றியது, அவருக்கு பிரபலத்தை தேடி தந்தது மிக்கி மவுஸ் கிடையாது.
5. தினம் ஒரு தகவல் : வெந்தயம்
வெந்தயம் கொஞ்சம் கசக்கும். அது தரும் பலன்களோ மிகவும் இனிக்கும். மேதி, வெந்தை, மெந்தியம் என பல்வேறு பெயர்களை கொண்ட வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும்.