பெரியார் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்: பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
பெரியார் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தாம்பரம்,
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் சேலையூரில் நேற்று நடந்த மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பெரியார் சிலையை அவமதித்தது யாராக இருந்தாலும் கண்டனத்துக்குரியது. தலைவர்களை அவமதிப்பதை பா.ஜனதா அனுமதிக்காது. ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து கூறலாம். ஆனால் வன்முறையாக இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. பெரியார் சிலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கோர்ட்டை அவமதிக்கும் வகையில் தான் பேசவில்லை என எச்.ராஜா கூறியிருக்கிறார். எனவே அவர் தரப்பு கருத்தைக்கூற அவருக்கு ஒரு வாய்ப்பை நாம் அளிக்கவேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு மற்றும் காஞ்சி வடக்கு மாவட்டம் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி கலந்து கொண்டு, 68 குழந்தைகளுக்கு மத்திய அரசின் செல்வ மகள் திட்டத்தின் மூலம் சேமிப்பு கணக்கு துவக்கி வைத்தார். மேலும் 68 பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு, மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
நிகழ்ச்சியில் மாநில பா.ஜனதா செயலாளர் கே.டி.ராகவன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணியம் வடக்கு மாவட்ட தலைவர் மோகனராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் பொற்றாமரை சங்கரன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story