அந்தமான் கவர்னர் டி.கே.ஜோஷி மாமல்லபுரம் வருகை, பல்லவர் கால சிற்பங்களை கண்டுகளித்தார்
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று வருகைதந்த அந்தமான் கவர்னர் டி.கே.ஜோஷி பல்லவர் கால சிற்பங்களை கண்டுகளித்தார்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று அந்தமான் கவர்னர் டி.கே.ஜோஷி வருகை புரிந்தார். அவர் அங்குள்ள ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பல்லவர் கால குடைவரை சிற்பங்களை பார்த்து ரசித்தார். அவருக்கு மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி லட்சுமணன் என்பவர் பல்லவர் கால சிற்பங்களின் தன்மைகள், அது வடிமமைக்கப்பட்ட காலம் குறித்து விரிவாக விளக்கி கூறினார்.
முன்னதாக அந்தமான் கவர்னரை திருக்கழுக்குன்றம் தாசில்தார் என்.வரதராஜன், மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி துவாரகநாத்சிங், வருவாய் அலுவலர் நாராயணன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வரவேற்றனர். மேலும் அந்தமான் கவர்னருடன் பாதுகாப்பு பணிக்காக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் அந்தமான் பாதுகாப்பு துறை அதிகாரிகளும், போலீசாரும் உடன் வந்திருந்தனர்.