மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 10:17 PM GMT)

தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த தாசில்தார் சத்தியன் கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், பொதுமக்களின் பிரச்சினைகளை துரிதமாக செயல்பட்டு தீர்த்து வந்த அவர் தொடர்ந்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்திலேயே பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஜீவா மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாலுகா அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத்தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேல், துணை செயலாளர் அன்பழகன், பொருளாளர் பாண்டுரங்கன், துணை பொருளாளர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் சின்னதுரை, சுந்தரவடிவேல், சந்திரகாசு, சக்திவேல், சபாபதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் கோகுலகிறிஸ்டீபன் தலைமையில் திடீர்குப்பம் பகுதி மக்கள் பெண்ணாடம் மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Next Story