பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
பணம் கொடுக்க மறுத்த பெண்ணை அரிவாள் வெட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
மேலக்கூடலூர் 20-வது வார்டு, சுல்லக்கரை வீதியை சேர்ந்த பேயத்தேவர் மகள் விருமாயி (வயது 40). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படு கிறது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று காலை இவர் கீழக்கூடலூர் முனியாண்டி கோவில் தெரு பகுதியில் நடந்து வந்தார்.
அப்போது மேலக்கூடலூர் 17-வது வார்டு ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சரவணன்(29), எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த ராஜ்குமார்(34) ஆகியோர் விருமாயியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர்.
அப்போது விருமாயி பணம் தர மறுத்ததால் அவர்கள் அரிவாளால் கை, கால் பகுதிகளில் வெட்டி விட்டு ஓடி விட்டனர். இதையடுத்து காயம் அடைந்த விருமாயி கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விருமாயி அக்காள் பேச்சியம்மாள் கூடலூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ராஜ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story