திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு


திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு
x
தினத்தந்தி 24 Sept 2018 3:45 AM IST (Updated: 24 Sept 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருமயத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருமயம்,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி, திருமயத்தில் உள்ள புதுக்கோட்டை-காரைக்குடி சாலையில் நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடந்தது.

பந்தயத்தை மாவட்டசெயலாளர் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 40 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை செல்வநேந்தல் சுந்தரேசன் மாடும், 2-வது பரிசை தினையாக்குடி சிவா மாடும், 3-வது பரிசை விராமதி கருப்பையா மாடும், 4-வது பரிசை விராமதி தையல்நாயகி மாடும் பெற்றன.

சிறிய மாடு பிரிவில் முதல் பரிசை பாண்டிக்கோவில் பாண்டிசாமி மாடும், 2-வது பரிசை பிடாரிகாடு குட்டியாண்டவர் மாடும், 3-வது பரிசை வெட்டிவயல் சுந்தரேசன் மாடும், 4-வது பரிசை கட்டக்குடி முத்துக்குமார் மாடும் பெற்றன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர் செல்வம், மாணவர் அணி செயலாளர் விஜயகுமார், ஒன்றியசெயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணை செயலாளர் ஜாகிர் மற்றும் கட்சி தொண்டர்கள், ஊர்பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Next Story