கவிழ்த்து போடப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள சுகாதார சீர்கேட்டால் பொதுமக்கள் அவதி
கும்மிப்பூண்டி பேரூராட்சியில் குப்பை தொட்டிகள் கவிழ்த்து போடப்பட்டுள்ளது. அந்த குப்பை தொட்டியை சுற்றிலும் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 150 குப்பைதொட்டிகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் கொட்டப்படும் குப்பைகள் அதற்கென உரிய நவீன மினி லாரி மூலம் தினமும் அள்ளப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக மேற்கண்ட குப்பை தொட்டிகள் அனைத்தும் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தலைகீழாக கவிழ்த்து போடப்பட்டு உள்ளன.
இதனால் குப்பைகளை கொட்ட வரும் பொதுமக்கள் அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் குப்பை தொட்டியை சுற்றி குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் தெருக்கள் முழுவதும் பறக்கிறது. எனவே கவிழ்க்கப்பட்ட குப்பைத்தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:- குப்பை அள்ளும் லாரி பராமரிப்பு பணிக்கு விடப்பட்டு ஒரு மாதம் ஆவதால் ஆட்களை வைத்து குப்பைகளை அள்ளுகிறோம். இதனால் அந்த குப்பை தொட்டிகள் கவிழ்த்து போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story