மாவட்ட செய்திகள்

ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி + "||" + Bus collision with 2 workers near Attur

ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி

ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பலி
ஆத்தூர் அருகே, பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித்குமார் (19). கூலித்தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு வேலைக்கு வந்தனர்.


நேற்று இரவு 9 மணியளவில் இவர்கள் ஆத்தூர் முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பஸ் சேலத்தில் பழுது பார்க்கும் பணியை முடித்துக்கொண்டு வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சும், தொழிலாளர்கள் வந்த மோட்டார் சைக்கிளும் சந்தனகிரி பகுதியில் நேருக்கு நேர் பயங்கரமான மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ரஞ்சித்குமார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்து: இலங்கையில் 30 பேர் சாவு
இலங்கையில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.
2. தளவாய்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்-கிளனர் உயிர்தப்பினர்
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3. தனியார் பஸ்களை அதிவேகமாக ஓட்டினால் உரிமம் ரத்து - போலீசார் எச்சரிக்கை
தேனி, அம்மையநாயக்கனூர் அருகே தனியார் பஸ்களால் விபத்து ஏற்பட்டதையடுத்து அதிவேகமாக பஸ்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
4. கும்பகோணத்தில் குடோனில் தீ விபத்து; ரூ.4 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் எரிந்து நாசம்
கும்பகோணத்தில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
5. காஞ்சீபுரத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; பள்ளி மாணவன் பலி
காஞ்சீபுரத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.