உஷாரய்யா உஷாரு..
அவள் பிரபலமான சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், பணியாற்றிக் கொண்டிருந்தாள். திருமணமாகிவிட்டது. ஒரு குழந்தையின் தாய். அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேருபவர் களுக்கு பயிற்சி கொடுப்பது அவள் வேலை.
அவள் பிரபலமான சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில், பணியாற்றிக் கொண்டிருந்தாள். திருமணமாகிவிட்டது. ஒரு குழந்தையின் தாய். அந்த நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேருபவர் களுக்கு பயிற்சி கொடுப்பது அவள் வேலை.
என்ஜினீயரிங் படித்து முடித்ததும், வேலைக்கு தேர்வான இளைஞன் ஒருவன் அவளிடம் பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தான். 22 வயதான அவன் கிராமப் பகுதியை சேர்ந்தவன். அவன் பேச்சும், செயலும், நடையும், உடையும் மற்றவர்கள் கேலி பேசும் விதமாக அமைந்திருந்தது. பொறுப்பின்மையும், சோம்பேறித்தனமும் அவனிடம் குடிகொண்டிருந்தது. அதனால் அவளுக்கு கீழ் பணிபுரியும் பெண்கள், ‘இவனுக்கு எப்படி பயிற்சி கொடுத்தாலும் தேறமாட்டான். அதனால் ஏதாவது காரணம் கூறி இவனை வேலையில் இருந்து வெளியேற்றிவிடு அல்லது இவனுக்கு பயிற்சி கொடுக்கும் பொறுப்பை வேறு ஏதாவது ஆண் அதிகாரியிடம் ஒப் படைத்துவிடு’ என்றார்கள்.
அவனது எண்ணெய் பூசிய தலையும், நேர்த்தியற்ற உடையும், திக்கித்திணறி பேசும் விதமும் அவளை இன்னொரு விதமாக சிந்திக்கவைத்தது. ‘மற்றவர்கள் புறக்கணித்தாலும் கிராமத்து இளைஞனான அவனுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாவது வேலையை கற்றுக்கொடுத்துவிடவேண்டும்’ என்று முடிவு செய்தாள்.
அவனுக்கு வேலை பிடிக்கவேண்டும் என்றால், வேலையை கற்றுக்கொடுக்கும் தன்னை அவனுக்கு முதலில் பிடிக்கச்செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவனுக்கு தன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அவனோடு அன்பாக பேசினாள். தன்னம்பிக்கையூட்டினாள். மொழிப் புலமையை வளர்த்துக்கொள்ளவும் பயிற்சியளித்தாள். அவனை ‘ரிலாக்ஸ்’ ஆக்குவதற்காக வெளியேயும் அழைத்துச் சென்றாள். அப்போது அவளது கணவர், குழந்தையை பற்றி அவன் விசாரிப்பான். அவளும் கணவரின் குறை நிறைகளையும் அவனோடு பகிர்்ந்துகொண்டாள்.
அவளது முயற்சி வீண்போகவில்லை. ஒன்பது மாதங்களில் அவன் ஓரளவு வேலையை கற்றுக்கொண்டு தேறிவிட்டான். அவனது நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதை தொடர்ந்து அடுத்தகட்ட பயிற்சிக்கு அவனை பரிந்துரைத்தாள். அவன் வட இந்திய மாநிலம் ஒன்றில் உள்ள அதன் கிளை நிறுவனத்திற்கு சென்று அந்த மேல்நிலை பயிற்சியை பெறவேண்டும்.
அவள் சந்தோஷமாக தனது குழுவில் உள்ள எல்ேலாரையும் அழைத்து, தனது தனிப்பட்ட முயற்சியால் அந்த இளைஞனிடம் ஏற்பட்ட மாற்றங்களையும், வளர்ச்சியையும் பெருமைபொங்க கூறினாள். அனைவரும் அவளை பாராட்டினார்கள். அவனையும் வாழ்த்தி வழியனுப்ப எல்லோரும் தயாராக, அவனோ யாரும் எதிர் பாராதவிதமாக அழத்தொடங்கினான். அனைவரும் அதிர்்ந்து போனார்கள். அழுகைக்கான காரணம் கேட்டதற்கு, தான் இங்கேயே தொடரப்போவதாகவும், இங்கிருந்து வேறு எங்கும் எந்த பயிற்சிக்கும் செல்லப்போவதில்லை என்றும் சொன்னான்.
பயிற்சி கொடுத்த அவள், அவனை தனியறைக்கு அழைத்துச்சென்று ‘இங்கிருந்து செல்ல நீ ஏன் மறுக் கிறாய்? வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஏன் தயங்குகிறாய்?’ என்று கேட்டதற்கு, அவன் சொன்ன பதில் அவளை நிலைகுலையவைத்தது.
‘நான் உங்களை காதலிக்கிறேன். என்னையும் நீங்கள் காதலித்ததால்தானே இத்தனை மாதங்கள் எனக்காக கஷ்டப்பட்டு இவ்வளவு உதவிகள் செய்தீர்கள். நீங்களும் நானும் பல இடங்களுக்கு ஒன்றாக சென்றிருக்கிறோம். ஒன்றாக பொழுதுபோக்கியிருக்கிறோம். அதை எல்லாம் நான் உங்கள் விருப்பத்துடனே படம் எடுத்தேன். அந்த படங்களை ஊரில் உள்ள நண்பர் களுக்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் பார்த்துவிட்டு, ‘நீங்கள் என்னை காதலிப்பதால்தான் வெளியே அழைத்துச்செல்கிறீர்கள். எனக்காக பணமெல்லாம் செலவு செய்கிறீர்கள்’ என்றார்கள். நீங்களும் உங்கள் கணவரை பற்றி அவ்வப்போது என்னிடம் குறை சொல்வீர்கள். அதனால் அவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிந்துகொண்டேன். நீங்கள் என்னை காதலிப்பது உண்மைதான்..’ என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்க அவளுக்கு, அவன் விஷயத்தில் தான் எங்கோ தவறு செய்துவிட்டோம் என்பது அப்போதுதான் புரிந்தது.
அவளுக்கு அவனைவிட 8 வயது அதிகம். அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறினாலும், ‘முட்டாள் மாதிரி பேசாதே. உன்னை காதலிப்பதாக கற்பனை செய்துகொண்டிருக்காதே. வெளியே ேபாடா..’ என்று அவளால் சொல்லியிருக்க முடியும். அப்படி சொன்னால் அதன் எதிர்விளைவுகள் வேறுமாதிரி அமைந்துவிடும். அவன் பிளாக்மெயில் செய்யவோ அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடவோ செய்துவிடுவான் என பயந்து, பக்குவமாக பேசி அவனை அனுப்பிவிட்டு, தனது கணவரிடம் விஷயத்தை கூறி கவலையோடு ‘டீல்’ செய்தபடியே வேலையில் இருந்தும் விலகி விட்டாள்.
பெண்களே இப்படியும் சில சம்பவங்கள் நடப்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!
- உஷாரு வரும்.
Related Tags :
Next Story