சமூகநீதிக்காக பாடுபடுபவர்கள் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமூகநீதிக்கு பாடுபடுபவர்கள் தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-
தூத்துக்குடி,
தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது“ தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்.
நடப்பு ஆண்டுக்கான(2018) தமிழக அரசின் “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் வருகிற 31-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story