எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் மேலும் 43 கைதிகள் விடுதலை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை சிறையில் மேலும் 43 கைதிகள் விடுதலை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:16 PM GMT (Updated: 11 Oct 2018 11:16 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து நேற்று மேலும் 43 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லை, அக்.


தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மற்றும் மகாத்மா காந்தி 150-வது ஆண்டு விழாவையொட்டி நன்னடத்தை கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பல்வேறு கட்டமாக ஏற்கனவே 85 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 8-வது கட்டமாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து மேலும் 43 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த உலகநாதன், மணி, ராமையா, ராமசாமி, இசக்கி, பெருமாள், சுரேஷ், செல்லத்துரை, சுதர்சன், மோகன் உள்பட 43 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

மத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, வெளியே அனுப்பி வைத்தார். அவர்களை சிறை வளாகத்துக்கு வெளியே நின்ற அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வீடுகளுக்கு அழைத்து சென்றனர். 

Next Story