கடலோர காவல்படை நிலையத்தில் ஹோவர் கிராப்ட் கப்பல்களை நிறுத்த புதிய தளம்


கடலோர காவல்படை நிலையத்தில் ஹோவர் கிராப்ட் கப்பல்களை நிறுத்த புதிய தளம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:45 PM GMT (Updated: 12 Oct 2018 8:08 PM GMT)

மண்டபம் இந்திய கடலோரகாவல் படை நிலையத்தில் ஹோவர் கிராப்ட் கப்பல்களை நிறுத்த புதிய தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தரையிலும், தண்ணீரிலும் அதிவேகமாக செல்லும் 5 ஹோவர் கிராப்ட் கப்பல்களும், ஒரு பெரிய ரோந்து கப்பலும் மற்றும் 1 சிறிய ரோந்து படகும் ரோந்து பணிக்காக உள்ளன.

கடலோர காவல்டை நிலையத்தில் உள்ள இந்த கப்பல்கள் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முதல் தொண்டி வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியான ராமேசுவரம் தனுஷ்கோடி முதல் கீழக்கரை வரை ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கப்பல்கள் நிலையத்தின் வளாக மண் பகுதியில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கப்பல்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் 5 கப்பல்களையும் நிறுத்தும் வகையில் புதிய தளம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பணிகள் முடிவடைந்து விரைவில் ஹோவர் கிராப்ட் கப்பல்கள் இந்த தளத்தில் நிறுத்தப்பட உள்ளன.


Next Story