வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது


வேதாரண்யத்தில், அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 14 Oct 2018 4:30 AM IST (Updated: 14 Oct 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேதாரண்யத்தில் அய்யப்ப பக்தர்கள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

வேதாரண்யம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு இடங்களில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலம் நடை பெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தது. அப்போது அய்யப்ப பக்தர்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அய்யப்ப பக்தர்கள் கையெழுத்திட்ட மனுவை தாசில்தார் ஸ்ரீதரிடம் வழங்கினர்.

Next Story