தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை


தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 14 Oct 2018 4:00 AM IST (Updated: 14 Oct 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது.

கரூர்,

தாந்தோணி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் இயற்கை சீற்றம், பேரழிவு போன்ற காலங்களில் உயிர் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படு கிறது. அக்கால கட்டங்களில் தங்களால் இயன்ற வரை தங்களை காத்துக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப் படுகிறது. இயற்கை பேரிடரான சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து, பஞ்சம், பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரி மாணவ- மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவிகள், சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம், அலுவலர்கள், பணியாளர்கள் போன்றவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ள திட்டமிடல், தேடுதல், மீட்டல் போன்றவைகளுக்காகவும் பயிற்சி மற்றும் மாதிரி ஒத்திகையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

சேதங்களை தவிர்க்கலாம்

பேரிடர் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவதில் வருவாய் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றுவதில் தீயணைப்பு பேரிடர் மேலாண்மைத்துறை மிகுந்த பங்கு வகிக்கிறது. இதனை பொதுமக்கள் பேரிடர் காலங்களில் பயன்படுத்தி சேதங்களை தவிர்க்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பேரிடர் மீட்பு வட்டாட்சியர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story