டெங்கு தடுப்பு பணி; கலெக்டர் ஆய்வு


டெங்கு தடுப்பு பணி; கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Oct 2018 10:00 PM GMT (Updated: 28 Oct 2018 9:11 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மேலும் மழைக்காலங்களில் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும், வீடு, கடை மற்றும் அலுவலக உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள நீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு தமிழ்நாடு மின்சார வாரிய கிடங்கு மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், குடியிருப்புகளில் வாகனங்கள் நிறுத்துமிடம், தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் உள்ளிட்டவைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Next Story