மாவட்ட செய்திகள்

பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி + "||" + The head of the former panchayat chief was killed for swine flu

பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி

பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
பன்றிக்காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.
விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, அத்திப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கவுண்டர். இவரது மகன் புகழேந்தி(வயது 35). வக்கீல். இவர் அத்திப்பள்ளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு புகழேந்திக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கும் காய்ச்சல் சரியாகவில்லை. இதையடுத்து புகழேந்திக்கு ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து புகழேந்தி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பன்றி காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புகழேந்தி பரிதாபமாக இறந்தார். பன்றிகாய்ச்சலால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியான சம்பவம் அத்திப்பள்ளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்
பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
2. பொள்ளாச்சி அருகே மீண்டும் சம்பவம்: காட்டுயானை தாக்கி தொழிலாளி சாவு
பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி
லாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
4. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
5. சங்ககிரி அருகே விபத்து: ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை விழுந்து டிரைவர் பரிதாப சாவு
சங்ககிரி அருகே, ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.