தொன்னையான்கொட்டாய் பகுதியில் சுகாதார பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி அடுத்த தொன்னையான்கொட்டாய் பகுதியில் சுகாதார பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த தொன்னையான்கொட்டாய் பகுதியில் சுகாதார பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், எங்கள் பகுதியில் இருந்த குடிநீர் குழாயை, கால்வாய் சீரமைப்பு பணியின் போது இணைப்பை துண்டித்து 5 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் குழாயை மீண்டும் இணைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாரியம்மன் கோவில் தெருவில், கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகிறது. எனவே, உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story