திருத்தணி அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தீ விபத்து
திருத்தணி அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருத்தணி,
திருத்தணி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கனகம்மாசத்திரம் அருகே உள்ள புதூரில் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 2 மணிஅளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எரிய தொடங்கியது.
அங்கிருந்த தொழிலாளர்கள் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையம் மற்றும் திருத்தணி மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். காலை 10 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன். சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சுதாகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story