பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 3:15 AM IST (Updated: 11 Nov 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கும் மற்றும் பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலுக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 1,288 கனஅடி தண்ணீர் வந்தது. இது நேற்று மேலும் அதிகரித்தது. காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 147 கனஅடியாக இருந்தது.

அணையின் நீர்மட்டம் 100.18 அடியாக இருந்தது. பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story