ஓடும் பஸ்சில் மளிகை வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் திருட்டு


ஓடும் பஸ்சில் மளிகை வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பூக்கடை பகுதியில் ஓடும் பஸ்சில், மளிகை கடை வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிராட்வே,

அரக்கோணம் வெங்கடாபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 45). அங்கு அவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

குமார் நேற்று முன்தினம் மளிகை பொருட்கள் வாங்க ரெயிலில் சென்னை சென்டிரல் வந்தார். அங்கிருந்து அவர் பாரிமுனைக்கு செல்லும் மாநகர பஸ்சில் ஏறினார்.

போலீசில் புகார்

பூக்கடை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது தன்னுடைய பணப்பையை குமார் பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.2½ லட்சம் திருட்டு போனதை கண்டு குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் பூக்கடை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story