மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிசேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் + "||" + Chepauk area Traffic change

சென்னையில் இன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிசேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் இன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிசேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை,

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கீழ்க் கண்ட சாலைகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும்.

* பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்படும். பாரதி சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல முடியாது. வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்லலாம்.

* காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் மாநகர பஸ் மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

* கெனால் ரோடு பாரதி சாலையில் இருந்து ஒரு வழி பாதையாக மாற்றப்படும். வாலாஜா சாலையில் இருந்து கெனால் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல முடியாது.

* அண்ணா சாலையில் இருந்து வரும் எம், பி, டி, டபிள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கெனால் ரோடு வழியாக அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.

* பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டைகள் உடைய வாகனங்கள் வாலாஜா சாலை வழியாகவே சென்று அந்தந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு சென்றடையலாம்.

காமராஜர் சாலை

* போர் நினைவுச் சின்னம் மற்றும் காந்தி சிலை வழியாக வரும் எம், பி, டி, டபிள்யூ ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் ஆகியவை பாரதி சாலை வழியாக கெனால் ரோட்டுக்கு சென்று அந்தந்த வாகன நிறுத்தங்களுக்கு சென்றடையலாம்.

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

* அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையிலிருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாலாஜா ரோடு, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

* அனுமதி அட்டை இல்லாமல் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

* அனுமதி அட்டை இல்லாமல் காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு எதிராக உள்ள கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.