மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் போலி டாக்டர் கைது + "||" + Fake doctor arrested in Kancheepuram

காஞ்சீபுரத்தில் போலி டாக்டர் கைது

காஞ்சீபுரத்தில் போலி டாக்டர் கைது
காஞ்சீபுரத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் திருமலை (வயது 35). இவர் காஞ்சீபுரம் குள்ளப்பன் தெருவில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் கிளினிக் நடத்துவதாக காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறையினர் பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சுகாதாரத்துறையினருடன் அங்கு விரைந்து சென்றனர்.

கைது

அப்போது அவரது மருத்துவ சான்றிதழ்களை சரிப்பார்த்ததில், இவர் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

இதையொட்டி, பெரிய காஞ்சீபுரம் போலீசார் திருமலையை கைது செய்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டும் இதே போன்று கைது செய்யப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட திருமலையை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.