மாவட்டத்தில் 44 மையங்களில் குரூப்-2 தேர்வை 8,779 பேர் எழுதினர்


மாவட்டத்தில் 44 மையங்களில் குரூப்-2 தேர்வை 8,779 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 11:00 PM GMT (Updated: 11 Nov 2018 5:02 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மையங்களில் குரூப்-2 தேர்வை 8 ஆயிரத்து 779 பேர் எழுதினார்கள்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர், சார் பதிவாளர், உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்பட 1,199 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய 3 தாலுகாக்களில் இந்த தேர்வு நடந்தது.

கிருஷ்ணகிரி தாலுகாவில் 28 மையங்களிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் 2 மையங்களிலும், ஓசூர் தாலுகாவில் 14 மையங்களில் என மொத்தம் 44 தேர்வு மையங்களில் நேற்று இந்த தேர்வு நடந்தது. இதற்காக மொத்தம் 12 ஆயிரத்து 137 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 44 மையங்களில் 8,779 பேர் இந்த தேர்வு எழுதினார்கள். 3,358 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு நடைபெறும் மையங்களில் போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. கண்காணிக்க 10 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் பிரபாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தேர்வர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கேட்டறிந்தார். தேர்வை முன்னிட்டு போக்குவரத்து வசதி குறைவான பகுதிகளில் தனியார் கல்லூரிகள் மூலமாக சிறப்பு பஸ்கள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

Next Story