திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 6 ஆயிரத்து 448 பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 6 ஆயிரத்து 448 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:45 PM GMT (Updated: 11 Nov 2018 9:36 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 6 ஆயிரத்து 448 பேர் எழுதினர்.

திருவாரூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 இடங்களில் 15 தேர்வு மையங்களில் நடந்தது. இதில் திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்வினை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் உள்ள 30 தேர்வு கூடங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 8 ஆயிரத்து 447 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 6 ஆயிரத்து 448 பேர் தேர்வு எழுதினர். 1,999 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பறக்கும் படை

மேலும் இப்போட்டி தேர்விற்காக 5 சுற்றுக்குழுவும், 3 பறக்கும் படையினரும், 30 ஆய்வு அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் முருகதாஸ், தாசில்தார் குணசீலி உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story