சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


சைல்டு லைன் சார்பில் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 14 Nov 2018 4:19 AM IST (Updated: 14 Nov 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் மீதான வன்முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசுத்துறையுடன் இணைந்து சைல்டு லைன் அமைப்பு நடத்தியது.

மானாமதுரை,

மாவட்ட சைல்டு லைன் இயக்குனம் வனராஜன் கூறியதாவது:– மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்பு நடத்தி மாணவ–மாணவிகளை மன உளைச்சலுக்கு உட்படுத்துவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறேம். சைல்டு லைன் அமைப்பு மூலமாக கடந்த 2 மாதத்தில் 139 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 8 மாதங்களில் 49 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் இருந்து 17 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சைல்டு லைன் அமைப்பின் மூலமாக குழந்தை தொழிலாளர், குழந்தைகள் மீதான ஆசிரியர்களின் தாக்குதல்கள், பெற்றோர் துன்புறுத்தல், காணாமல் போகும் குழந்தைகள் ஆகியோர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இன்று (புதன்கிழமை) குழந்தைகள் தினத்தையொட்டி மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசுத்துறையுடன் இணைந்து குழந்தைகள் மீதான வன்முறை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில் குழந்தைகள் நலக்குழு தலைவர் பால்ராஜ், சைல்டு லைன் இயக்குனர் ஜீவானந்தம், வளர்ச்சி திட்ட அலுவலர் ராமதிலகம், சைல்டு லைன் ஒருங்கினைப்பாளர் முத்துகண்ணு உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் ரெயில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. வனராஜன் கூறுகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களில் 49 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் இருந்து 17 குழந்தைகளை மீட்டுள்ளோம் என்றார்.


Next Story