கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க செக்காரக்குடி, புதுக்கோட்டையில் தடுப்பணை கட்ட வேண்டும் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. வலியுறுத்தல்


கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க செக்காரக்குடி, புதுக்கோட்டையில் தடுப்பணை கட்ட வேண்டும் தெற்கு மாவட்ட ம.தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Nov 2018 3:00 AM IST (Updated: 14 Nov 2018 7:26 PM IST)
t-max-icont-min-icon

கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் செக்காரக்குடி, புதுக்கோட்டையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

தூத்துக்குடி, 

கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் செக்காரக்குடி, புதுக்கோட்டையில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம் 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. அவைத்தலைவர் குருமத்தேயு ஜெபசிங் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் வீரபாண்டி செல்லச்சாமி, சிவஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில துணைத்தலைவர் அனல் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் அமானுல்லா, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் பீர்முகமது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

தீர்மானங்கள் 

கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பணியாற்றி தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். பேரூரணி–செக்காரக்குடியில் சாலையில் உள்ள தரைவழிப்பாலங்களை மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அமைக்க வேண்டும். மணியாச்சியில் இருந்து உப்பாற்று ஓடையில் கோரம்பள்ளம் வழியாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம், தளவாய்புரம், பொட்டலூரணி, ராமசாமிபுரம், திருவனந்தபுரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை தேக்க வேண்டும். தெய்வச்செயல்புரத்தில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நசீர் நன்றி கூறினார்.

Next Story