மோகனூர் பகுதியில் குழந்தைகள் தின விழா


மோகனூர் பகுதியில் குழந்தைகள் தின விழா
x
தினத்தந்தி 15 Nov 2018 3:30 AM IST (Updated: 14 Nov 2018 9:47 PM IST)
t-max-icont-min-icon

மோகனூர் பகுதியில் அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

மோகனூர், 

மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுடரொளி தலைமை தாங்கினார். விழாவை முன்னிட்டு, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், முன்னாள் ஆசிரியர் நவலடி, ஆசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மோகனூர் ஒன்றியம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, நடனம், நாடகம், பேச்சு போட்டி, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் என பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் பாப்பாத்தி அனைவரையும் வரவேற்றார் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கரன் பரிசுகள் வழங்கி பாராட்டினார், விழாவில் பெற்றோர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்கள். முடிவில் உதவி ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.

Next Story