மாவட்ட செய்திகள்

கோவை ஏல மையத்தில்இலைரக தேயிலை விலை அதிகரிப்பு + "||" + Coimbatore Auction Center Leaf tea price increases

கோவை ஏல மையத்தில்இலைரக தேயிலை விலை அதிகரிப்பு

கோவை ஏல மையத்தில்இலைரக தேயிலை விலை அதிகரிப்பு
கோவை ஏல மையத்தில் இலை ரக தேயிலை விலை அதிகரித்து உள்ளது.
கோவை,

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் மின்னணு முறையில் தேயிலை ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தங்களுக்கு தேவையான தேயிலையை ஏலம் எடுத்து வருகிறார்கள். இதன்படி நடைபெற்ற 46-வது ஏல விவரம் வருமாறு:-

இந்த ஏலத்துக்கு 3 லட்சத்து 64 ஆயிரத்து 565 கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 788 கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது மொத்தம் 91 சதவீதம் ஆகும்.

இந்த ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத்தூள் 110 ரூபாய் 30 காசுக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் ஒரு கிலோ 108.45-க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.1.85 காசு அதிகரித்தது. மொத்தம் ரூ.3 கோடியே 67 லட்சத்து 6 ஆயிரத்து 516-க்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.

இதேபோல் இலை ரக தேயிலை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 872 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 612 கிலோ ஏலம் போனது. இது 92 சதவீதம் ஆகும். ஒரு கிலோ இலை ரக தேயிலையின் விலை 106 ரூபாய் 91 காசு ஆகும். இது கடந்த வாரம் ரூ.99.90 காசு ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் ஒரு கிலோவுக்கு ரூ.7.01 காசு விலை அதிகரித்தது. இந்த வாரம் ரூ.1 கோடியே 30 லட்சத்து ஆயிரத்து 538-க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது.

இந்த ஏலத்தில் மொத்தம் 4 லட்சத்து 54 ஆயிரத்து 400 கிலோ தேயிலைத்தூள் மற்றும் இலைரக தேயிலை ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 54 ஆகும். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் தேயிலை தூள் மற்றும் இலை ரக தேயிலை விலை அதிகரித்து காணப்பட்டது. மேற்கண்ட தகவலை கோவை தேயிலை ஏல மையம் வெளியிட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...