காஞ்சீபுரத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


காஞ்சீபுரத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 16 Nov 2018 10:48 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சிறுகாவேரிப்பாக்கம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு அமலா (35) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணி அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை சாலையோரம் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் சுப்பிரமணியை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story