‘கஜா’ புயலால் மாவட்டம் முழுவதும் சாரல் மழை அதிகபட்சமாக மங்களபுரத்தில் 14 மி.மீட்டர் பதிவு


‘கஜா’ புயலால் மாவட்டம் முழுவதும் சாரல் மழை அதிகபட்சமாக மங்களபுரத்தில் 14 மி.மீட்டர் பதிவு
x
தினத்தந்தி 17 Nov 2018 4:00 AM IST (Updated: 17 Nov 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயல் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக மங்களபுரத்தில் 14 மி.மீட்டர் மழை பதிவானது.

நாமக்கல், நவ.17-

‘கஜா’ புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மங்களபுரத்தில் 14 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

மங்களபுரம்-14, மோகனூர்-7, சேந்தமங்கலம்-6, ராசிபுரம்-5, எருமப்பட்டி-5, குமாரபாளையம்-1, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 39 மி.மீட்டர் ஆகும்.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் குடைபிடித்தவாறு செல்வதை பார்க்க முடிந்தது. சில மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்வதையும் காண முடிந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டி சென்றனர். வழக்கத்தை காட்டிலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

Next Story