அணையில் இருந்து நீர் திறப்பு: வைகை ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை


அணையில் இருந்து நீர் திறப்பு: வைகை ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது கலெக்டர் நடராஜன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2018 10:20 PM GMT (Updated: 16 Nov 2018 10:20 PM GMT)

அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது என் கலெக்டர் நடராஜன் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி–3 மற்றும் வைகை பூர்வீக பாசனப்பகுதி 2ல் உள்ள 5 கண்மாய்களுக்கு வருகிற 21–ந் தேதி வரை 1,525 மில்லியன் கன அடியும், இதர வைகை பூர்வீக பாசனப்பகுதி 2–க்கு 23–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை 631 மில்லியன் கன அடியும், பகுதி–1ஐ சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு 28–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை 69 மில்லியன் கன அடி தண்ணீரை விரகனூர் மதகணைக்கும், இதர வைகை பூர்வீக பாசனப்பகுதி–1க்கு 348 மில்லியன் கனஅடி தண்ணீரை பகுதி–1ல் உள்ள நிலையூர் கால்வாயில் தேவைக்கேற்ப வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும்.

எனவே, வைகை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் மேடான பகுதிக்குச் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். வைகை கரையோரம் மற்றும் கால்வாய் நீர்வழித்தடத்தில் உள்ள மக்கள் வைகை ஆற்றில் குளித்தல், நீந்துதல், மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், வாகனங்களை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது. செல்பி படம் எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்பக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story