காட்ரம்பாக்கம், மஞ்சங்காரணை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
காட்ரம்பாக்கம், மஞ்சங்காரணை ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
பெரியபாளையம்,
காஞ்சீபுரம் மாவட்டம் காட்ரம்பாக்கம் ஊராட்சி புதுப்பேர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சார் ஆட்சியர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரவிச்சந்திரன், குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. கே.என். ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 72 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 13 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கோபி, காட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் மஞ்சங்காரணை ஊராட்சியில் உள்ள கோட்டைகுப்பம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அதிகாரி சோபன், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பட்டா கோருதல் உள்ளிட்ட 12 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பெற்றுக்கொண்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி உடனடி தீர்வு காணப்பட்ட 5 மனுக்களுக்கு அதற்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மீதி 7 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி 30 நாட்களில் தீர்வு காண உத்தரவிட்டார். முடிவில், ஊராட்சி செயலாளர் பொன்னரசு நன்றி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு ஊராட்சியில் உள்ள அகரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு பொன்னேரி தனி தாசில்தார் சங்கவிரதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 26 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரிகள் பாலாஜி, மணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன், ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பட்டா கோருதல் உள்ளிட்ட 26 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பொன்னேரி தனி தாசில்தார் சங்கவிரதி பெற்றுகொண்டு தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி உடனடி தீர்வு காணப்பட்ட 4 மனுக்களுக்கு அதற்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மீதி 22 மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி 30 நாட்களில் தீர்வு காண உத்தரவிட்டார். முடிவில் கிராம உதவியாளர் கற்பகம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story