புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உடனே நிவாரணம் வழங்கவேண்டும் - ரங்கசாமி வலியுறுத்தல்


புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உடனே நிவாரணம் வழங்கவேண்டும் - ரங்கசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Nov 2018 12:11 AM GMT (Updated: 18 Nov 2018 12:11 AM GMT)

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உடனே கணக்கெடுப்பு பணி நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

காரைக்கால்,

கஜா புயல் பாதிப்பை பார்வையிட, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு காரைக்கால் வந்தார். காளிகுப்பம், மண்டபத்தூர், காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டம் முழுவதும் கூடுதல் மின் ஊழியர்களை வைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பெரும் அளவு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களின் சேதமான படகுகளை கணக்கெடுத்து நஷ்டஈடு வழங்கவேண்டும். எந்தவித காரணம் கொண்டும் மந்த நிலை கூடாது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அவருடன், எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சந்திரபிரியங்கா, என்ஜினீயர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் சென்றனர்.

Next Story