குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Nov 2018 10:45 PM GMT (Updated: 20 Nov 2018 2:53 PM GMT)

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கழுவன்திட்டையில் நடந்தது. இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

களியக்காவிளை,

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.  நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மனித உரிமை துறை மேற்குமாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், விஜயதரணி, ராஜேஷ்குமார் மற்றும் மாநில மனித உரிமைதுறை தலைவர் மகாத்மா ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன:–

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்திய பா.ஜனதா அரசை இந்த கூட்டம் கண்டிக்கிறது. மார்த்தாண்டத்தில் ரூ.220 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் உறுதிதன்மையை பொறியாளர் ஆய்வுக்குழுவை அமைத்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற்று கொடுப்பேன் என வாக்குறுதியளித்த மத்திய மந்திரி, அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும்.

மேற்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மனித உரிமை துறை நிர்வாகிகளுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.  

கூட்டத்தில், குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், மாநில மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி லைலா ரவிசங்கர், மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர் அனந்தகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வர்த்தக காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ஆமோஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story