வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி


வானவில் : நடமாடும் ‘எந்திரன்’ டெமி
x
தினத்தந்தி 21 Nov 2018 2:04 PM IST (Updated: 21 Nov 2018 2:04 PM IST)
t-max-icont-min-icon

இப்போது வீடுகளில் பர்சனல் கம்ப்யூட்டர் பெரும்பாலும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.

இது தொழில்நுட்ப உலகம். மின்னணு உலகில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழும் சமயம் இது. ஒரு காலத்தில் அலுவலகத்தில் மட்டுமே இருந்த கம்ப்யூட்டர்கள் இப்போது வீடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதேபோல வீடுகளில் அனைவரது தேவைகளையும் நிறைவேற்றும் பர்சனல் ரோபோவை உருவாக்கியுள்ளது இஸ்ரேலைச் சேர்ந்த குளோப்ஸ் என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம்.

இந்த ரோபோ, ஒரு மீட்டர் உயரம் கொண்டது. எடை 12 கிலோ மட்டுமே. இதன் சக்கரத்தில் சார்ஜிங் வசதி உள்ளது. இது வீட்டில் உள்ளவர்கள் அனைவரது கட்டளையையும் நிறைவேற்றும். அதேபோல சிறிய அலுவலகத்திலும் இதைப் பயன்படுத்த முடியும். இது கூகுள் அசிஸ்டென்ட் மென்பொருளை கொண்டது. அத்துடன் மொபைல் அசிஸ்டென்ட் மூலமும் செயல்படக் கூடியது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் எங்கிருந்தும் இதனுடன் பேச முடியும்.

கூகுள் ஹோம், அமேசான் எக்கோ, போர்டல் உள்ளிட்ட நவீன கருவிகள் அனைத்தும் ஒருங்கே கொண்ட நடமாடும் எந்திரனாக வடிவமைக்கப்பட்டுள்ளது டெமி.

இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் ரோபோக்களையும், அடுத்த ஆண்டு ஒரு லட்சம் ரோபோக்களையும் விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவை முதலில் அமெரிக்காவிலும் பிறகு ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனாவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பலவித செயல்பாடுகளை செய்யும் விதமாக டெமி வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யூசுப் உல்ப். குறிப்பாக வீட்டில் உள்ள முதியவர்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களது குரல்வழி உத்தரவுகளை செயல்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல குழந்தைகளை கண்காணிப்பது போன்ற பணிகளிலும் இதை ஈடுபடுத்த முடியும். அலுவலகத்தில் வராத பணியாளருக்குப் பதிலாக குழு கூட்டத்தில் டெமியை பங்கேற்கச் செய்ய முடியுமாம்.

பர்சனல் எந்திரன் டெமி அனைத்து வீடுகளிலும் பயன்பாட்டுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை எனலாம். 

Next Story