சிறு, குறு, நடுத்தர, பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் அரசு தொழிற் பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி கலெக்டர் தகவல்
சிறு, குறு, நடுத்தர, பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் அரசு தொழிற் பயிற்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க அரசு ஆணை வழங்கி உள்ளது.
அதன்படி, இந்த பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு பயிற்சி அளிக்க ரூ.50 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விபரங்கள் www.ski-l-lt-r-a-i-n-i-ng.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து “ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-600032” என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
வருகிற 30-ந் தேதி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாகும். மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அரக்கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி முதல்வரை அணுகவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story