பர்கூரில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
பர்கூரில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில் பர்கூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து அலுவலர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, சின்னபர்கூர், டெக்ஸ்டைல்ஸ் மார்க்கெட் பகுதிகளில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனர். அப்போது துணிக்கடைகள், ஓட்டல்கள், இறைச்சி கடைகள், தள்ளுவண்டிகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் குறித்த வாசகம் அடங்கிய (பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படமாட்டாது, தயவு செய்து துணிப்பை கொண்டு வரவும், பர்கூர் பேரூராட்சி) சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பல கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது, தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால், அபராத தொகையாக ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படும் என எச்சரிக்கை செய்து அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் தலைமை எழுத்தர் வெங்கடாசலம், ஜீவானந்தம், மகேந்திரன், கி.விஜயகுமார், பர்கூர் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story