விக்கிரவாண்டி அருகே: 657 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


விக்கிரவாண்டி அருகே: 657 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 5:19 PM GMT)

விக்கிரவாண்டி அருகே நடந்த விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் 657 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

விழுப்புரம், 


விக்கிரவாண்டி, பனையபுரம், பொன்னங்குப்பம், தும்பூர், சின்னதச்சூர், எசாலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 657 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா தும்பூர், பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார். விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஆவின் சேர்மன் பேட்டை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 657 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிவகுரு, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குமாரகிருஷ்ணன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் எசாலம் பன்னீர், சிந்தாமணிவேலு, லட்சுமி நாராயணன், நங்காத்தூர் மாணிக்கம், முகுந்தன், சரவணக்குமார், நாகப்பன், இயக்குனர்கள் பொன்னங்குப்பம் ரவி, பனையபுரம் ஜோதிராஜா, தொரவி சுப்பிரமணி, துரைமுருகன், முன்னாள் தலைவர்கள் கலியமூர்த்தி, அலமேலு வேலு, சுமதி நாகப்பன், ஒன்றிய அ.தி.மு.க. பாசறை இணை செயலாளர் பிருந்தா, நிர்வாகி அருள் உள்பட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

முன்னதாக அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் விக்கிரவாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பூர்ணராவ் தனது சொந்த செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 25 மின்விசிறிகளை விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கினார்.

Next Story