கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு: கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் - கலெக்டர் அனுப்பி வைத்தார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார்.
விழுப்புரம்,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே ரூ.27 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் அரிசி, வேட்டி-சேலை, காய்கறிகள், பாய், சட்டை, துண்டு, குடிநீர் பாட்டில்கள், பருப்பு வகைகள், மெழுகுவர்த்தி, சோப்பு என ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் நேற்று விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
இதனை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து லாரி மூலம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் அனுப்பி வைத்தார். அப்போது நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையர்கள் கள்ளக்குறிச்சி அருண், விழுப்புரம் லெட்சுமி மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story